மனநல மன்ற தொடக்க விழா


மனநல மன்ற தொடக்க விழா
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கல்லூரியில் மனநல மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி கலை அரங்கில் மாவட்ட மனநல திட்டம் சார்பில், மனநல நல்லாதரவு மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் விஜயகோபால் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி மனநல பாதிப்பு அடைந்தவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும். தற்கொலை, போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்கும் வழிமுறை பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 10 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஆங்கிலத் துறை பேராசிரியர் கற்குவேல் ராஜ் நன்றி கூறினார்.



Next Story