தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் லால்பகதூர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர்கள் விஜயகுமாரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு தலைவர் ரவி வரவேற்றார். முன்னாள் மாநிலத்தலைவர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய, நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு உரிய தொகையை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும். கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகைஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று ஊழியர்களின் ஓய்வுகால நிதி பயன்களை நிறுத்தி வைக்க கூடாது. ரேஷன்கடை பணியாளர்களின் பிரச்சினைகளை குழுஅமைத்து தீர்க்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம், வேலாயுதம், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story