கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா
x

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை இணை பேராசிரியை ஸ்ரீமதி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அ.மரியசெசிலி கலந்து கொண்டு, 'இலக்கை உணர்த்தும் இலக்கிய மன்றம்' என்ற தலைப்பில் பேசினார். முடிவில், மாணவி ஹிரூபா தேவி நன்றி கூறினார். இதில் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மன்ற செயலாளர் ஸ்ரீமதி செய்து இருந்தார்.


Next Story