ரூ.53 லட்சத்தில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா


ரூ.53 லட்சத்தில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாணியந்தல் கிராமத்தில் ரூ.53 லட்சத்தில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாணியந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.13½ லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரம் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், துணை தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீரை திறந்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வாணியந்தல் கிராமம் மற்றும் காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலையை உதயசூரியன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இ.சி.ஜி., எக்ஸ்ரே, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

விழாவில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், சின்னசேலம் ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், ஒன்றிய அவைத்தலைவரும், ஆலத்தூர் ஒன்றிய கவுன்சிலருமான ரவிக்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பூங்கலியன், அன்பழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story