ஆற்காடு நகராட்சி சார்பில் தூய்மை பணி தொடக்க விழா
ஆற்காடு நகராட்சி சார்பில் தூய்மை பணி தொடக்க விழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் நகராட்சி மூலமாக தூய்மை பணியாளர்களை நியமித்து தூய்மை பணி தொடக்க விழா. மற்றும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டாக்டர்.பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். பின்னர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.