கொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா


கொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாகொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாஅமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றினார்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம், ஆய்வக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள், 7079 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை ெதாடர்ந்து புதிய பள்ளி கட்டிடத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறை கட்டிடம், ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, உதவி கலெக்டர் அர்ச்சனா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story