மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் சிறுவர்-சிறுமியர் மன்றம் திறப்பு


மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் சிறுவர்-சிறுமியர் மன்றம் திறப்பு
x

மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் சிறுவர்-சிறுமியர் மன்றம் திறப்பு

மயிலாடுதுறை

குத்தாலம் ஒன்றியம் மேக்கரிமங்கலம் ஊராட்சியில் போலீஸ்துறை சார்பில் சிறுவர்- சிறுமியர் மன்ற திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன், பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா கலந்து கொண்டு சிறுவர்- சிறுமியர் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள் வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து கைப்பந்து விளையாடினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story