ரூ.64 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
வள்ளியூர் யூனியனில் ரூ.64 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் யூனியன் ஆவரைகுளம், அடங்கார்குளம், தனக்கர்குளம், அச்சம்பாடு, ஆனைகுளம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் யூனியன் கூட்டம், தலைவர் சேவியர் செல்வராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் கணபதிராமன், ரமேஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.