காமராஜ் பள்ளியில் ஆங்கில மன்ற தொடக்க விழா


காமராஜ் பள்ளியில் ஆங்கில மன்ற தொடக்க விழா
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் ஆங்கில மன்ற தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், பொருளாளர் ஜெ. ரத்தின ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரபு வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் எஸ்.எஸ். துரைசாமி நாடார்-மாரியம்மாள் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் என்.கற்குவேல் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில கண்காட்சி, பள்ளி மாணவ- மாணவிகளின் ஆங்கிலப் படைப்புகள், பேச்சு, நடனம், நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் சங்கீதா, கனகராணி, மாரிச்சாமி, தனலட்சுமி, முருகேஸ்வரி, அனுசுயா, ஈஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். மாணவி பிருந்தா லட்சுமி நன்றி கூறினார்.


Next Story