விருத்தாசலத்தில் விருதை ஓட்டல், சுவீட்ஸ், பேக்கரி உரிமையாளர் நலச்சங்கம் தொடக்க விழா
விருத்தாசலத்தில் விருதை ஓட்டல், சுவீட்ஸ், பேக்கரி உரிமையாளர் நலச்சங்கம் தொடக்க விழா நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் விருதை ஓட்டல், சுவீட்ஸ் மற்றும் பேக்கரி உரிமையாளர் நலச்சங்கம் தொடக்க விழா மற்றும் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு நகர தலைவர் அய்யர் பவன் சிவக்குமார் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் அதிசயம் பேக்கரி ராம்மோகன் வரவேற்றார். ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். சங்க மாநில தலைவர் வேலூர் டார்லிங் ரெசிடென்சி உரிமையாளர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் மதுரை வாசன், டிபன் ஹோம் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, சட்ட ஆலோசகர் வக்கீல் செல்வபாரதி, கடலூர் மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் ஜீ.ஆர். ஓட்டல் ரங்கராஜன், மாவட்ட செயலாளர் ஓட்டல் ஆனந்தபவன் நாராயணன், ராம்கி நாராயணன், மாவட்ட பொருளாளர் ஓட்டல் சுபா கிராண்ட் ஆத்மலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் நாகப்பட்டினம் உமா ரொட்டிக்கடை குப்புசாமி, மாநில இணைச் செயலாளர் புதுக்கோட்டை பழனியப்பா மெஸ் சண்முக பழனியப்பன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஓட்டல் அர்ச்சனா சுப்புராமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் பி.டி.ஆர். ராஜன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளரும் விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர் நலச்சங்க தலைவருமான கோபு, நகர செயலாளர் மணிவண்ணன், நகர பொருளாளர் சேட்டு முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளரும், தங்கவேலு மிலிட்டரி ஓட்டல் உரிமையாளருமான மனோஜ் குமார், நகர பொருளாளரும் முத்துலட்சுமி சுவீட்ஸ் கடை உரிமையாளருமான முத்துசாமி ஆகியோர் நன்றி கூறினர். முன்னதாக புதிய சங்க நிர்வாகிகள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.