கே.ஏ.எஸ்.ராம்தாஸ் பாலி கிளினிக் திறப்பு
தூத்துக்குடியில் கே.ஏ.எஸ்.ராம்தாஸ் பாலி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 1-வது தெருவில் மகளிருக்கான ஸான்டா ஸ்கேன் மையம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்துடன் கூடிய கே.ஏ.எஸ்.ராம்தாஸ் பாலி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், ஆஷா சண்முகநாதன், ராஜேசுவரி ராம்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கி ஆஸ்பத்திரியை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை இலவசமாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இரண்டு முறை சர்க்கரை நோய் பரிசோதனை, மாலையில் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. வயிறு ஸ்கேன், பிரசவத்துக்கான ஸ்கேன், தைராய்டு ஸ்கேன், ரத்தக்குழாய் ஸ்கேன் ஆகிய பரிசோதனையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மாஸ்டர் ஹெல்த் செக்அப் ரூ.900-க்கு மேற்கொள்ளப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர்கள் சிவக்குமார் ராம்தாஸ், புவனேசுவரி சண்முகநாதன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
விழாவில் தொழில் அதிபர்கள் கே.ஏ.எஸ்.ஆர்.சரவணன், கே.ஏ.எஸ்.ஆர். பிரபு, கே.ஏ.எஸ்.ஆர். அருண், அசோக், கார்த்திக் நாராயணன், ராம்குமார், தியாகராஜன், டாக்டர்கள் விஜய் தன்ராஜ், சங்கீதா தன்ராஜ், பொன்னரசி சண்முகநாதன், நிதின், தமிழரசி சண்முகநாதன், பிரவீன், பொன்ரேகா சண்முகநாதன், கலையரசி சண்முகநாதன், மாநகராட்சி கவுன்சிலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.