நூலகம்- திறன் வகுப்பறை திறப்பு விழா
செங்கோட்டை அரசு பள்ளியில் நூலகம்- திறன் வகுப்பறை திறப்பு விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுாலகம், திறன் வகுப்பறை, கூட்டரங்கம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீர் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியா் கழகத் தலைவரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா முன்னிலை வகித்து திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியா் முருகேசன் வரவேற்றார். அதனைதொடா்ந்து கூட்டரங்க கட்டிடத்தை முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியா் கழகப்பொருளாளா் கணேசன், எஸ்.எம்.சி.தலைவா் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியா்கள் தென்காசி செந்தூர்பாண்டி, கட்டளைகுடியிருப்பு சாஸ்திரி, புளியரை திவான்ஒலி, புல்லுக்காட்டுவலசை மாடசாமி, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் செண்பகக்குற்றாலம், ராமசாமி, ஆறுமுகம், துரைராஜ், நுாலகர் ராமசாமி, சுப்பிரமணியன், முருகன், தண்டமிழ்தாசன் சுதாகர், மன்சூர்அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவி தலைமை ஆசிரியா் சமுத்தரகனி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளா்கள், மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.