போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்
கோடை காலத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோா் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story