தியாகதுருகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா
தியாகதுருகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்,
மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நடந்த காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story