வேப்பங்காட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை திறப்பு விழா
வேப்பங்காட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஊராட்சி வேப்பங்காட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவி பொன் செல்வி, கவுன்சிலர்கள் மகாராஜா, செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வேப்பங்காட்டைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் நடேசன், மோசஸ் ஆகியோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story