போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும்


போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும்
x

போதைபொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

போதைபொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில், சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களையும் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபை கூட்டத்தின் நோக்கமாகும். இக்கூட்டத்தை பொருத்தவரை, மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்தி கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பாகும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவரத்தை குறிப்பிட வேண்டும்.

போதை பொருள்

ஊராட்சி பகுதிகளில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும்.

கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் செல்போனில் இணையதளத்தில் விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அக்கண்டராவ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்தரராஜன், உதவி கலெக்டர் முருகேசன், ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவி ஜெயமாலா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story