அரசு மேல்நிலை பள்ளியில் வாசிப்பு திறன் மன்றம் தொடக்க விழா
பொன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் வாசிப்பு திறன் மன்றம் தொடக்க விழா நடந்தது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி அருகே பொன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு திறன் மன்றம் தொடக்க விழா தலைமையாசிரியை மங்கல்யான் தலைமையில் நடைபெற்றது.
தென்னக ரெயில்வே மேலாளர் தனசேகரன், உதவி தலைமை ஆசிரியர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை உமாதேவி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்ச்சங்க துணைத்தலைவர் சீனுவாசன் பங்கேற்று, வாசிப்பு பயிற்சியை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
மேலும் புத்தகங்களை வாசிப்போம் மனிதர்களை நேசிப்போம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் சரவணன், பத்மநாபன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியர் சிவராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story