ரூ.8¾ லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா


ரூ.8¾ லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
x

நெல்லை அருகே ரூ.8¾ லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது

திருநெல்வேலி

தாழையூத்து:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பாலாமடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளையில் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தொழிலதிபர் மயில் பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் அங்கப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். பாலாமடை பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, துணைத்தலைவர் இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். விழாவில் நெல்லை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் கட்டளை அன்பு, தி.மு.க. மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* நெல்லை அருகே உள்ள தாழையூத்து பாலாமடையில் கனரா வங்கியின் சார்பில் புதிதாக ஏ.டி.எம்.மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தொழிலதிபர் மயில் பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் அங்கப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், பாலாமடை பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, துணைத்தலைவர் இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனரா வங்கி மண்டல மேலாளர் சிதம்பரம் கலந்து கொண்டு ஏ.டி.எம்.மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கனரா வங்கி மேலாளர் சுடலைமுத்து, துணை மேலாளர் அனிஷ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் கட்டளை அன்பு, பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி, தி.மு.க. மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story