புனித சந்தியாகப்பர் ஆலய திறப்பு விழா


புனித சந்தியாகப்பர் ஆலய திறப்பு விழா
x

ஏரல் அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள கொற்கையில் புனித சந்தியாகப்பர் ஆலயம் ரூ.2 கோடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி, ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலய கட்டுமான பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அசன விருந்து நடந்தது. நிகழ்ச்சியில் 25 குருக்கள், கொற்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரவீந்திரன் பர்னாந்து, கொற்கை பரதர் நல ஊர் நலக்கமிட்டியினர் இணைந்து செய்திருந்தனர்.


Next Story