வேதநாராயணபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி


வேதநாராயணபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
x

தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்சி

தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆதிரங்கம்

தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் பிரசித்திபெற்ற வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் பெருமாள் இந்து மதத்தின் அளப்பறிய பொக்கிஷங்களான ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித் தருகிறார். மேலும் பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

சொர்க்கவாசல் திறப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வந்த இத்திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கடந்த 23-ந்தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் பெருமாள் ஒவ்ெவாரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோகினி அலங்காரம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.


Next Story