வாரச்சந்தை திறப்பு விழா


வாரச்சந்தை திறப்பு விழா
x

தெற்கு ஆத்தூர் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் வாரச்சந்தை திறப்பு விழா-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தெற்கு ஆத்தூரில், ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில், பா.சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இச்சங்கத்தின் சார்பில் தற்போது திருமண மண்டபத்திற்கு பின்புறம் சங்க வளாகத்தில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இது வாரத்தில் முதல்நாளான திங்கட்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரச்சந்தை திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. சங்க தலைவர் ஏ.கே.செல்வராஜ் நாடார் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆத்தூர் நாடார் சங்க செயலாளர் ஏ.வி.காமராஜ் வரவேற்று பேசினார்.

ஜெனரேட்டரை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் இயக்கி வைத்தார். சந்தை முதல் விற்பனையை மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளரும், முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கியின் தலைவருமான உமரி சங்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவரும், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஏ.பி.சதீஷ்குமார், சுகந்தலை கிராம பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், சேதுக்குவாய்த்தான் கிராம பஞ்சாயத்து தலைவி சுதா சீனிவாசன், முக்காணி கிராம பஞ்சாயத்து தலைவி தனம் நாராயணன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமால்தீன், ஆத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் தமிழரசன், தெற்காத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் அரசகுமார், சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தின் துணைத்தலைவர்கள் பிரேம்குமார், மோசஸ் அமல்சன், பொருளாளர் கோட்டாளமுத்து, துணை செயலாளர்கள் பி.என்.அரவிந்தன், முத்துசெல்வம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.பி. முருகானந்தம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story