அரசு மருத்துவமனையில் திருக்குறள் பலகை திறப்பு


அரசு மருத்துவமனையில் திருக்குறள் பலகை திறப்பு
x

அரசு மருத்துவமனையில் திருக்குறள் பலகை திறக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தினம் ஒரு திருக்குறள் 34-வது பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருக்குறள் பலகையை ஓய்வு பெற்ற அரசு டாக்டர் மணிவண்ணன் திறந்து வைத்து பேசினார். டாக்டர் லட்சுமி சிறப்புரையாற்றினார். திருக்குறள் ஒப்பித்த பள்ளி மாணவி கீர்த்தனாவை பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. இதில் நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருக்குறள் பரப்புரையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story