சாத்தான்குளத்தில்மெய்நிகர் நூலகம் திறப்பு விழா
சாத்தான்குளத்தில்மெய்நிகர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணர் அரசுக் கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் ஏ.சா.சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சாத்தான்குளம் அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பொத்தக்காலன்விளை நூலகர் நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் வரவேற்றார்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மிதிவண்டி வழி விழிப்புணர்வு பரப்புரையாளர் மாடசாமி கவுரவிக்கப்பட்டார். வாசகர் வட்டத்தலைவர் நடராசன், யோகா பயிற்றுனர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் அனந்த கிருஷ்ணன், புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பவுலின், வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றம் செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். யோகா பயிற்றுனர் கமலம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொறியாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேம்குமார் நன்றி கூறினார்.