நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலகம் திறப்பு விழா
கழுகுமலையில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் கே.சுப்பிரமணியபுரம் மற்றும் கே.வெங்கடேஸ்வரபுரம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் திட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் மண் மாதிரி பரிசோதனை முகாம் நடைபெற்றது.
விழாவிற்கு நபார்டு வங்கி ஏ.ஜி.எம். சுரேஷ் ராமலிங்கம் தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கே.வெங்கடேஸ்வரபுரம் கிராம நீர்வடிப்பகுதி குழு தலைவர் ராஜேந்திரன், கே.சுப்பிரமணியபுரம் கிராம நீர்வடிப்பகுதி குழு துணை தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் விடியல் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி வரவேற்றார். தொடர்ந்து நெல்லை விற்பனை குழு செயலாளர் எழில்ஆண்டணி, மூத்த வேளாண்மை அலுவலர் லலிதாபரிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா சண்முகபாண்டி, வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், வேளாண்மை அலுவலர் செல்வமாலதி, கழுகுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாணிக்கராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கழுகுமலை கிளை விடியல் டிரஸ்ட் திட்ட மேலாளர் மகாதேவன் நன்றி கூறினார்.