தாயில்பட்டி பகுதிகளில் தொடர்மழை
தாயில்பட்டி பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பட்டாசு உற்பத்தி பாதிப்பு
தீபாவளி சீசனை முன்னிட்டு பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தாயில்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது.
தாயில்பட்டி, வெற்றிலையூரணி, சுப்பிரமணியபுரம், மடத்துப்பட்டி, கனஞ்சாம்பட்டி, கோமாளிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையினால் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்மழை
தீபாவளிக்காக இன்னும் சில தினங்கள் மட்டும் பட்டாசு உற்பத்தி நடைபெறும் என்பதால் தற்போது மழையின் காரணமாக பட்டாசுகளை உலர வைக்க முடியாமல் உரிமையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது கடைசி கட்டத்தில் கிடைத்துவரும் ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியாமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்ததால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரினால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.