வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர் மழை


வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர் மழை
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பட்டாசு உற்பத்தி

வெம்பக்கோட்டை, கண்ணக்குடும்பன்பட்டி, விளாமரத்து பட்டி, கோமாளிபட்டி, வனமூர்த்தி லிங்கபுரம், தாயில்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, சக்திநகர், வெற்றிலையூரணி, தெற்கு ஆனைக்குட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது.

ெதாடர்ந்து மழை பெய்ததால் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. விஜய கரிசல் குளம் அகழாய்வு பணியும் பாதிக்கப்பட்டதால் குழிகள் சேதமடையாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டன.

தொடர்மழை

வெம்பக்ேகாட்டை பகுதிகளில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழை, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில தினங்களாக நாற்று நடவும் பணி, பாத்திகட்டும்பணி, விதைக்கும் பணி முழுமையாக நடைபெற்ற நிலையில் தற்போது பெய்யும் மழை பயிர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

மேலும் தொடர்ந்து மழை பெய்தால் மானாவாரி பயிரான பருத்தி, சூரியகாந்தி சாகுபடி செய்யும் பணியும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story