தொடர் மழையால் உளுந்து பயிர்கள் பாதிப்பு


தொடர் மழையால் உளுந்து பயிர்கள் பாதிப்பு
x

கபிஸ்தலம் பகுதியில் தொடர் மழையால் உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பகுதியில் தொடர் மழையால் உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர்.

கன மழை

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே கணபதி அக்ரஹாரம் சுற்றுப்பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஏக்கரில் உளுந்து பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது செடிகள் முளைத்து வளரும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்து செடிகள் அழுகின

மழையால் உளுந்து, செடிகள் முற்றிலும் அழுகியதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை முற்றிலும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே வேளாண் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story