ஈரோட்டில் 4-வது நாளாக வருமான வரி சோதனை:டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரை வீட்டில் இருந்து அழைத்து சென்ற அதிகாரிகள்வங்கி கணக்கு, லாக்கரை ஆய்வு


ஈரோட்டில் 4-வது நாளாக வருமான வரி சோதனை:டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரை வீட்டில் இருந்து அழைத்து சென்ற அதிகாரிகள்வங்கி கணக்கு, லாக்கரை ஆய்வு
x

ஈரோட்டில் 4-வது நாளாக வருமான வரி சோதனை: டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரை வீட்டில் இருந்து அழைத்து சென்ற அதிகாரிகள் வங்கி கணக்கு, லாக்கரை ஆய்வு செய்தனர்

ஈரோடு

ஈரோட்டில் 4-வது நாளாக தொடர்ந்த வருமான வரி சோதனையில், டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரை வீட்டில் இருந்து அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் வங்கி கணக்கு, லாக்கரை ஆய்வு செய்தனர்.

வருமான வரி சோதனை

ஈரோடு திண்டல் சக்திநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 65). இவர் கடந்த 1½ ஆண்டுக்கும் மேலாக மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, டாஸ்மாக் குடோன்களுக்கும் அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான லாரி ஒப்பந்தத்தை பெற்று உள்ளார். மாநில அளவில் இவர் ஒருவர் மட்டுமே லாரி ஒப்பந்ததாரராக இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகள், சரக்கு வேன்களில் மதுபானங்களை வினியோகம் செய்து வருகிறார். சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களை சச்சிதானந்தம் சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்படி ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், செங்கோடம்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தத்துக்கு சொந்தமான கே.எஸ்.எம். டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்.

4-வது நாள்

திருச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 2-வது நாள் சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியது.

இந்தநிலையில் 4-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது. அவரது வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரான சச்சிதானந்தனை விசாரணைக்காக வீட்டில் இருந்து காரில் 3 அதிகாரிகள் நேற்று காலை அழைத்து சென்றனர். வங்கி கணக்கில் உள்ள பணம், வங்கி லாக்கரில் உள்ளவற்றை ஆய்வு செய்வதற்காக சச்சிதானந்தம் அழைத்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை வீட்டுக்கு திரும்பவில்லை. இதேபோல் சச்சிதானந்தம் வீட்டிலும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story