ஷூ கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை


ஷூ கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
x

ஷூ கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்


ஷூ கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஏ கஸ்பா பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஷூ தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் 5 கார்களில் சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையிலான வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அவர்கள் குறிப்பிட்ட ஒரு ஷூ கம்பெனியில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்கள் அலுவலர்களின் செல்போன்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொழிலாளர்கள் மூலம் தகவல்கள் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவி பொருத்தி நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து சோதனையை தொடங்கினர். 2-வது நாளாக நேற்று சோதனை தொடர்ந்தது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரி துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள பிரபல ஷூ தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் 5 நாட்களுக்கு மேலாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story