ஷூ கம்பெனியில் வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக நீடித்தது


ஷூ கம்பெனியில் வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக நீடித்தது
x

ஷூ கம்பெனியில் வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக நீடித்தது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுக்கொல்லை, துத்திப்பட்டு, பேரணாம்பட்டு சாலை, அம்பேத்கர் நகர், அயித்தம்பட்டு, பாங்கி ஷாப், மாதனூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வேறு இடங்களில் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகள், ஷூ உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் என 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தோல் மற்றும் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். இந்தசோதனை 4-வது நாளாக நீடித்தது. பதிவேடுகள் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story