பருத்தி வரத்து அதிகரிப்பு


பருத்தி வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பருத்தி வரத்து அதிகரிப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யும் விளைபொருட்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு சரக்கு வாகனம், டிராக்டர்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நெல், உளுந்து, மணிலா, தானிய பயிர்களுக்கு அடுத்ததாக பருத்தி வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இங்கு பருத்தி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 600 மூட்டைகள் வரை பருத்தி வரத்து வந்தது. இவற்றை எடைபோட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ எடை கொண்டது) ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் கூறுகையில், மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை காட்டிலும் இங்கு விலை அதிகம் வைக்கப்படுவதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பலர், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தினமும் 600 மூட்டைகள் முதல் 750 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. தொடர்ந்து, இனி வரக்கூடிய நாட்களிலும் பருத்தி வரத்து அதிகரித்து காணப்படும் என்றனர்.


Next Story