யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

ராஜபாளையம் அருகே பயிர்களை சேதமாக்கும் யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே பயிர்களை சேதமாக்கும் யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் தாசில்தார்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள், வனத்துறை அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ஈஞ்சார் கூடலிங்கம்:- கரும்பு சாகுபடி செய்த போது தீப்பிடித்து பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கருவேல மரங்கள்

நாகூர், ராமமூர்த்தி:- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி கேரளாவில் நடைமுறையில் உள்ளது போல் விவசாயிகள் பங்களிப்புத்தொகை வழங்கும் பட்சத்தில் அப்பணியாளர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

ரமேஷ்:- ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சீமைகருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளது. இதனை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயமுருகன்:- திருத்தங்கல் உறிஞ்சுகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நீர் வரத்து பாதையில் சிமெண்டு் கால்வாய் அமைக்க வேண்டும்.

பயிர் சேதம்

அம்மையப்பன்:- ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் விவசாய பகுதியில் யானைகள் அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் பயிர் சேதம் ஏற்படுகிறது. யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

கணேசன்: அனைத்து விவசாயிகளுக்கும் தென்னங்கன்று வழங்க வேண்டும். போதுமான அளவு சினை ஊசிகள் இருப்பு வைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story