ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம்  அதிகரிப்பு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பகம் ஆகும். இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது மலை அடிவாரப்பகுதியில் மாமரங்கள், பலா மரங்கள் அதிகம் வளர்ந்து உள்ளன. இந்த பழங்களை சாப்பிட குட்டிகளுடன், யானைகள் அடிவாரப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிக்குள் யாரும் தங்க வேண்டாம். அதேபோல வனப்பகுதிக்குள் மாலை 4 மணிக்கு மேல் யாரும் நுழையக் கூடாது. என சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story