தி.மு.க.ஆட்சியில் கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: சீமான்


தி.மு.க.ஆட்சியில் கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: சீமான்
x

தி.மு.க.ஆட்சியில் கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால் கொலை எண்ணிக்கையை போலீஸ் உயர் அதிகாரிகள் குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளார். ஆனால் 4 மாதங்களாகியும் அந்த அறிக்கையை அரசு வெளியிடாததால், அது தற்போது கசிய விடப்பட்டு உள்ளது. இதில், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வேறு இடத்தில் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

----


Next Story