மானாமதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு: குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்கள்


மானாமதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு: குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்கள்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் அந்த பழக்கதிற்கு அடிமையாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் அந்த பழக்கதிற்கு அடிமையாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா புழக்கம் அதிகரிப்பு

மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர், பூவந்தி, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து மறைமுக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 15 முதல் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிைமயாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 15 முதல் 17 வயது உள்ள பள்ளி மாணவர்கள் மானாமதுரை பகுதியில் வீடுகளில் உள்ள கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவர்கள் மது குடித்த நிலையில் இருந்தனர்.

குற்ற செயல்களில்

இதேபோல் மானாமதுரை பகுதியில் உள்ள கடைக்கு முன்பு அந்த மாணவர்கள் அமர்ந்து மாலை நேரங்களில் டியூசன் செல்லும் பள்ளி மாணவிகளை போதையில் இருந்த நிலையில் கேலி செய்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:- பொதுவாக எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாரில் உள்ள ஒரு சிலர் இந்த சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் கூறாததால் இந்த சம்பவம் மேலும் நடைபெறுவதற்கு காரணமாக உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்யவும், மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story