உழவர் சந்தைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; சங்க கூட்டத்தில் தீர்மானம்
உழவர் சந்தைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்
தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 179 உழவர் சந்தைகளில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்க்கும் 720 பேரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொது செயலாளர் நெடுஞ்செழியன், செயற்குழு உறுப்பினர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story