சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 17,608 கன அடி நீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் வினாடிக்கு 17 ஆயிரத்து 608 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு,
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் வினாடிக்கு 17 ஆயிரத்து 608 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணைக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் வருவதாலும் நீர்வரத்து அதிகரித்துநீர்மட்டம் 117 அடியை எட்டி 92.27 சதவீத அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 17,608 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வினாடிக்கு ரும் 17 ஆயிரத்து 608 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக கொலமஞ்சனூர், எடத்தனூர், திருவிடத்தனூர், புத்தூர் செக்கடி, சதா குப்பம், வாழவச்சனூர் ஆகிய தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே நாளுக்கு நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் ஆற்றின் கரையோரம் சென்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆங்காங்கே இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளனர்.