மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 2-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 26-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மதியம் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடிக்கு கீழ் உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்தை திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.32 அடியாக இருந்தது.