வேலை நேரம் 12 மணிநேரமாக உயர்வு:ஏ.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம்


வேலை நேரம் 12 மணிநேரமாக உயர்வு:ஏ.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஏ.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்

ஈரோடு

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தி தமிழக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் வேலை நேரத்தை உயர்த்திய சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற தொழிலாளர்களுக்கான உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story