பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 78.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 213 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மதியம் 2 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1,112 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story