வெளிநாடு-உள்நாடு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை


வெளிநாடு-உள்நாடு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
x

கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போல வெளிநாடு, உள்நாடு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போல வெளிநாடு, உள்நாடு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

கோரிக்கை

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியிடம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சென்னை-மதுரை-சென்னை உள்நாட்டு விமான சேவையை கொரோனா பொது முடக்கத்திற்கும் முன்பு இருந்தது போல அனைத்து விமானங்களையும் இயக்க வேண்டும். ஏர் பஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்களையும் இயக்க வேண்டும்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக குறைக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் அதிகப்படுத்த விமான நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சென்னை-மதுரை விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வணிகர்கள் மற்றும் பொது மக்கள் கூடுதலாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் போதுமான விமானங்கள் இயக்கப்படாததாலும், சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதாலும் மிக அதிகமாக விமான கட்டணம் உள்ளது.

கூடுதலான விமான சேவை

இதனால் மக்கள் பயன்படுத்த இயலாத அல்லது மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விமானத்தில் டிக்கெட் கிடைக்காமலும், விமான கட்டணம் அதிகரிப்பதினாலும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

மதுரை-சென்னை-மதுரை வழித்தடங்களில் கூடுதலாக விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலான விமான சேவையை தொடங்க விமான நிறுவனங்களை அறிவுறுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story