கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

அசோக்குமார் எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், ஆவின் முன்னாள் தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

வீட்டு வசதி சங்கம்

ஓசூர் சாந்திநகரில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் நடந்த விழாவுக்கு தலைவர் எம்.நடராஜன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். சங்க செயலாளர் முனிராஜ் முன்னிலை வகித்தார். இதில் சங்க இயக்குனர்கள் அரப்ஜான், சூடப்பா, சக்ரவர்த்தி, பெருமாள் பிள்ளை மற்றும் பாபு, அலுவலக பணியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றினார். மேலும், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகர முன்னாள் பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகாஷ், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் நாகேஷ், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் தேசிய கொடியுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

கிருஷ்ணகிரி வீட்டுவசதி வாரியம் பாலாஜி நகர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

சுதந்திர தினத்தையொட்டி பொட்டமுகிலாளம் வனப்பகுதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகி மரிசாமி கவுடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்பட்டார். அதன்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் ஆகியோர் தியாகி மரிசாமி கவுடுவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.


Next Story