சுதந்திர தின விழா


சுதந்திர தின விழா
x

ஜி.பி.பார்மசி கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் என்ஜினீயர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள் பரத நாட்டியம் மூலம் அனைவரையும் வரவேற்று, தமிழ் பற்றை வெளிப்படுத்தி நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய முறையில் சமையல், ரங்கோலி போட்டிகல் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் சுசித்ரா செல்வம் நன்றி கூறினார். இதேபோல் திருப்பத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் செல்வக்குமார், ஜி.பி.பாலிடெக்னிக் கல்லூரியில் இயக்குனர் டாக்டர் பொ.பிரபாகர், திருப்பத்தூர் ஐ.டி.ஐ.யில் மேலாளர் சிவக்குமார் ஆகியோரும் தேசிய கொடியேற்றினர். இதில் கல்லூரிகளின் நிறுவனர், தாளாளர் ஜி.பொன்னுசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


Next Story