ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தின விழா
ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டி.தரணிபதி, இயக்குனர் எம்.சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இயக்குனர்கள் எஸ்.ரமேஷ், சி.ஆர்.ஆசிநாதன், நிர்வாக அலுவலர் எஸ்.ஆதிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் பிரீத்தி ராம்குமார் வரவேற்றார். சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ஜி.செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பொருளாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், தலைவர் கே.குப்புசாமி சுதந்திர தின விழா பற்றி பேசினர். மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் இணைச் செயலாளர் எம்.மானக்சந்த் இனிப்புகள் வழங்கினார். விழாவில் இயக்குனர்கள் சி.பி.எம். கருணாகரன், டி.மோகன் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story