சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா
ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் டி.தரணிபதி இயக்குனர் எம். சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார் .இயக்குனர்கள் எஸ் .ரமேஷ் ,சி .ஆர் .ஆசிநாதன் நிர்வாக அலுவலர் ஆதிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றார்.
சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ஜி. செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் .பொருளாளர் டாக்டர் பி. பாலகிருஷ்ணன் தலைவர் கே. குப்புசாமி ஆகியோர் சுதந்திர தின விழாவினை பற்றி சிறப்புரை ஆற்றினர். மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் இணைச்செயலாளர் எம். மானக்சந்த் இனிப்புகள் வழங்கினார். அப்போது இயக்குனர்கள் சி.பி.எம். கருணாகரன் டி .மோகன் குமார், மானக்சந்த் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.