ஆரணி நகராட்சியில் சுதந்திர தின விழா


ஆரணி நகராட்சியில் சுதந்திர தின விழா
x

ஆரணி நகராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

துணைத்தலைவர் பாரி பி.பாபு முன்னிலை வகித்தார் நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சிவானந்தம், தயாநிதி, நகரசபை உறுப்பினர்கள், ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் உள்பட பல கலந்து கொண்டனர்.

முடிவில் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story