நடுக்கடலில் படகில் தேசிய கொடியேற்றி சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நாகூரில், நடுக்கடலில் படகில் தேசிய கொடியேற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
நாகூர்:
நாகூரில், நடுக்கடலில் படகில் தேசிய கொடியேற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
அமுத பெருவிழா
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ஆண்டு அமுத பெருவிழாவாக இல்லந்தோறும் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.நாகூரில் உள்ள வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் தேசிய கொடியை பறக்கவிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நாகூர் பட்டினச்சேரி ஆரியநாட்டு தெருவை சேர்ந்த 20- க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை படகில் நடுக்கடலுக்கு சென்று படகில் சுமார் 25 அடி உயரமுள்ள கொடிமரத்தில் தேசிய கொடியை ஏற்றி ஒருவருக்கொருவர் சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நாகூர் தர்கா
புகழ்பெற்ற நாகூர் தர்கா வாசலில் நடந்த நிகழ்ச்சியில் தர்கா மேனேஜிங் டிரஸ்டி காமில் சாஹிப் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை தர்கா நிர்வாகத்தினர் வழங்கினா் இதில், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.