சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Aug 2023 9:02 AM IST (Updated: 15 Aug 2023 10:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை,

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


Next Story