திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சுதந்திர தின மணல் சிற்பம்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சுதந்திர தின மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பா.ஜனதா சார்பில் மணல் சிற்பம் வரையப்பட்டு உள்ளது.
இதில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், நாட்டு மக்களுக்கு 200 கோடி தடுப்பூசி போடப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிற்பத்தை ெபாதுமக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் பிரேம் குமார், மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகபிரிவு தலைவர் ராஜகண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story