இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவி பலாத்காரம் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடியில் தனியார் பள்ளியில் படித்த 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், அதில் தொடர்புடைய மற்றவர்களையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டும் என கூறியும் பரமக்குடி காந்தி சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தேசிய கவுன்சில் உறுப்பினர் கண்ணகி சிறப்புரையாற்றினார். மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமலட்சுமி, வக்கீல் பசுமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கருணாநிதி, ஜீவா, களஞ்சியம், பரமக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் ராசி போஸ், பரமக்குடி நகர் செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, செய்தி தொடர்பாளர் முகவை மீரா உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.